Jupiter Retrogression and Auspicious wedding time – Vakra Guru Palan
வக்கிர குருவும் திருமணமும்
திருமணத்திற்கு உகந்த “குருபலன்” காலத்தினை ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இராசியில் இருந்து குரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்துதான் கூறமுடியும்.
இவ்வருடம் குரு கிரகம் நிராயண முறையில் (Sidereal Longitude ) 1 மே 2009 முதல் 30 ஜூலை 2009 வரை வக்கிர கதியாக(Retrogression) கும்ப ராசியில் (Aquarius) வசிக்கிறார். பின்னர் மீண்டும் மகர ராசிக்கே(Capricorn) திரும்புகிறார்.
குரு வக்கிர கதியில் இருக்கும் பொழுதும் சில இராசிகளுக்கு தற்காலிகமாக திருமணத்திற்குரிய நல்ல சூழலை தருவார் இந்த கால கட்டத்தில் எடுக்கப்படும் திருமண முயற்சிகளும் பெரும்பாலும் வெற்றி தரும். இடையில் வரும் குரு வக்கிரத்தில் பெண்-பிள்ளை சம்மதம் தெரிவித்தவுடன், நிச்சிய்ம் செய்து குரு வக்கிர கதியில் முடியும் முன்னர் திருமணம் செய்தல் நன்று. அப்படி இயலாத நிலையில் குரு முழுமையாக நல்ல பலன் தரும் காலத்தில் திருமணத்தை நடத்தல் மிகநன்று.