
This Year Thai Pongal (Magara Sankaranthi) Falls on 14 Jan 2010 Thursday
Thai (Makara) Month starts on 14 Jan 2010 Thursday at 12:38 Noon (IST)
Auspicious Time for Cooking Sweet Pongal and Sun Prayer
# India : 12:38 to 13:25
(Sun rise 6:40 @chennai )
# Singapore : Before sunset
(Sun rise 7:12 @Singapore) more...
# Malaysia : Before sunset
Sun rise 07:23 @KL more..
Latitude 03°09'N, Longitude 101°41'E
# Fijii : Before sunset
Due to delay in birth of Thai (Mahara Shankarathi)
(Sun rise 05:41 @Labasa ) more...
Latitude 18°06'S, Longitude178°30'E
# Austrlia & Newzealand : 4:30pm to 5:30pm
Due to delay in birth of Thai (Mahara Shankarathi)
(Sunrise 06:14 @Melbourne) more...
Latitude 35°15'S , Longitude 149°08'E
சென்னையில்
பொங்கல் அன்று சூரியன் 12:38க்கு பிறகு மகர ராசியில் பிரவேசிப்பதால்
நன்பகல் 12:38 க்கு பிறகு பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்துவது நன்று.
சென்னை சூரிய உதயம்:6:35
சூரிய அஸ்தமனம்: 18:01
மொத்த பகல் காலம்(அகஸ்):11மணி 26 நிமிடங்கள்
ராகு காலம்: 1:43 p.m. to 3:09 p.m.
எமகண்டம்: 6:35 a.m. to 8:00 a.m
மிகநல்ல நேரம்:
அன்றைய தினம் மேஷ லக்னத்தில் (பரணி நட்சத்திரத்தில்) நன்பகல்
12:38Noon க்கு மேல் பகல் 13:25pm மணி முன்னர் அஷ்டம சுத்தி(8ஆம் இடம் சுத்தம்) அடுப்பு மூட்டுதல், பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்தல் மிகவும் நன்று
மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் அன்று கிரஹணம் முன்னரை பகல் 9 மணிக்கு முன்னர் மாட்டுப்பொங்கல் வழிபாடு நன்று. மாலை 4:42 க்கு பிறகு மாட்டுவண்டி ஊர்வலம், கிராம தேவதை, அம்மன் கோயில் வழிபாடு நன்று.
பொங்கல் அன்று
|
 |
ஏழை விவசாய குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விப்போம்
பசு, கன்று, காளை, எருமைகளுக்கு தவிடு, வெல்லம் கலந்து தந்து அவைகளை மகிழ்விப்போம்
ஊர் திருவிழாவிற்கு உதவிடுவோம்
கதர், கைத்தறி, பருத்தி உடைகளை அனிந்து பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம்
நகரத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ஏழை விவசாயின் பொங்கல் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்து உதவிடலாம்
புது பானை வாங்கி குயவர் வாழ்வினை உயர்த்துவோம் !
|
" ஏழைவிவசாயிகளின் மகிழ்ச்சியால் தான் உண்மையான பொங்கல் திருவிழாவை காணலாம்"
தை மாத பிறப்பு (Makara Sankranthi) மற்றும் தை மாத முடிவு(மாசி மாத பிறப்பு) - சென்னை |
வரருசி வாக்கிய முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:32 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.25மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
ஆரியபட்டீயம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:27 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.17மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
திருக்கணிதம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மதியம் 12:38 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 1.37மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
தைமாதம் முதல் தேதியிலிருந்து சூரியன் நிராயன மகர ராசியில் (நிராயண 270°முதல் 300° வரை) சஞ்சரிப்பார் அதே நேரத்தில் சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பார் இதை உத்திராயண புன்னியகாலம் என்றும் பருவகாலத்தில் “பின்பணி” காலம் (ஹேமந்த ருது) என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை மகரசங்காரந்தி என அழைக்கப்படுகிறது
இதர நாடுகளில் தை மாதம் பிறப்பு: சர்வதேச தேதி கோடு துவங்கும் பகுதியின் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் நியூசிலாந்து முதல் இந்தியாவின் மேற்கே கிரீன்விச் வரை உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவில் கடைபிடிக்கும் அன்றே தை மாத முதல் தேதி ஆகும்.
மாத பிறப்பு கணணம் - சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம்: Makara Sankaranti - Beginning Time
“தை பிறந்தால் வழி பிறக்கும்” திருமணம் கூடிவரும்........!
தமிழ் மாத பிறப்பு சூத்திரம்: “சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் எந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கிறாரோ அந்த நாளே சூரியன் பிரவேசித்த இராசிக்குரிய மாதம்”ஆகும் என்கிற விதிப்படி கணணம் செய்தால்.
சூரியனின் நிராயண ஸ்புடம் (புவி சாய்வு கோணம் கழித்து) நிலையான புள்ளி, மாறும் அயனாம்ச வேறுபாடு அடிப்படையில் கொண்டு கணித்த புள்ளிவிபரம் அடிப்படையில்.
இந்திய மைய நேரம்(IST) உஜ்ஜெயினி பட்டணத்தில் (82 º30´E கிழக்கு தீர்கரேகாம்சம் 23 º11´N வடக்கு அட்சரேகாம்சம்) சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் மதியம் 12:38(இந்திய நேரம்)
அஸ்தமனம் மாலை 6:00 என்கிற நிலையில்(சூரிய அஸ்தமனத்தை கணிக்க பல்வேறு விதமான கணக்கீடுகள் உள்ளன அவற்றை இங்கு விளக்க இடமில்லை)
18:00 - 12:38 =5:22 மணி வேறுபாடு கிடைக்கிறது (சூரிய அஸ்தமனம் வரை இடையில் உள்ள நேரம்)
சர்வதேச இந்திய நேரம் வேறுபாடு + மேல் கிடைத்த வித்யாச நேரம் = +5:30 + 5:22 =+10:52 முழுமையாக +11 மணி என்று எடுத்துக்கொண்டால் எந்த நாட்டில் சர்வதேச நேரம் +11(UTC) மணி ஆகிறதோ அந்த நாடுகளில் (23 º11´N வடக்கு அட்சரேகாம்சம் கீழ்) மாலை நேரத்தில் (சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர்) தைமாதம் பிறக்கிறது.
இனி இதை பாகையாக மாற்றுவோம்: 1 பாகைக்கு = 4 நிமிடங்கள், 11 மணிக்கு சமமான பாகை கணிக்க
பூமியின்நிலநடுக்கோட்டின்(Equator) வடக்கே 23 º11 N மற்றும் தெற்கே 23 º11 S அட்சரேகை( latitude) க்குட்பட்ட பகுதியில், தீர்கரேகை(Longitude) +165 E சர்வதேச தேதி எல்லைக்கோடு உட்பட்ட பகுதியில் கிரீன்விச் நேரப்படி கிழக்கு +11:00 East மணி நேர வித்யாசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் 14.1.2010 அன்று தான் தை மாதப்பிறப்பு
பூமியின் தென்பகுதியில் 23 º11´S அட்சரேகாம்சம் கீழும் (Southern Hemisphere) உள்ள, கிரீன்விச்சிலிருந்து கிழக்கு 165 º E தீர்காம்சம் வரை உள்ளவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தைமாத பிறப்பு
குறிப்பு: நில நடுக்கோட்டிற்கு கீழ் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தற்பொழுது கோடைகாலம் எனவே சூரிய அஸ்தமனம் உள்ளூர் நேரப்படி சுமார் 6:45 மணி ஆகும் இந்த நிலையில் அவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தை முதல் நாள்.
கிரீன்விச் பகுதிக்கு மேற்கே உள்ள நாடுகளில் வட, தென் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 14.1.2010 அன்றுதான் தை மாத முதல் நாள்
23º11 N வடக்கு அட்சரேகைக்கு (Northern Hemisphere) மேல் உள்ள நாடுகள், ஜப்பான் வடக்கு ரஷ்யா, வடக்கு, வட கிழக்கு சீனா, தைவான், ஜப்பான்நாடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாதம் பிறப்பதால் மறுநாள் 15.1.2010 அன்று தை முதல் நாள்.
தை முதல் நாள் மாற்றம் இருப்பின் இப்பகுதிகளின் வாஸ்து நாள், கரிநாள், தனியநாள் இவைகளில் மாற்றம் இருக்கும்.